மனிதர், விலங்கு, தாவரம், சுற்றுச்சூழல் துறையை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய் தடுப்பு தயார் நிலைக்கான தேசிய ஒற்றைச் சுகாதார இயக்கத்தை முன்னெடுக்க நாக்பூரில் உள்ள தேசிய ஒற்றைச் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பதவியை விஞ்ஞானி 'எச்' (ஊதிய நிலை-15) நிலையில் உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றைச் சுகாதார நிலையத்தின் இயக்குநர் பணியிடத்தை ஊதிய நிலை 15 (ரூ.1,82,000 - ரூ.2,24,100) ஆக விஞ்ஞானி 'எச்' நிலையில் உருவாக்குவதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.35.59 லட்சம் நிதிச் செலவு ஏற்படும்.
0 Comments