மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகமும் (என்எஸ்எஸ்ஓ-கள அலுவலகப் பிரிவு) இஸ்ரோவின் கீழ் உள்ள தேசிய தொலையுணர்வு மையமும் (என்ஆர்எஸ்சி) இணைந்து டிஜிட்டல் முறையில் அதிநவீன ஜியோ ஐசிடி கருவிகள் மற்றும் புவன் தளத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் என்எஸ்எஸ்ஓ-வின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் திரு சுபாஷ் சந்திர மாலிக், என்ஆர்எஸ்சியின் இணை இயக்குநர் டாக்டர் சீனிவாசராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நகர்ப்புற புவியியல் பிரிவு கட்டமைப்புகளை நிர்வகிக்க, நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வானது ஐந்தாண்டுகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
பெருமளவிலான சமூக பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ள நகர்ப்புறத் துறையில் மாதிரி கட்டமைப்புகளைச் சேகரிப்பதில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் இதில் ஈடுபடுத்தப்படுகிறது.
முதல் முறையாக 2017-22-ம் ஆண்டில் நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வு டிஜிட்டல் வடிவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது புவன் தளத்தைப் பயன்படுத்தி 5300-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2022-27-ம் ஆண்டின் தற்போதைய காலகட்டத்தில் 8,134 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
0 Comments