குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ரூ.1,06,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தஹேஜில் பெட்ரோநெட் திரவ இயற்கை எரிவாயுவின் பெட்ரோ ரசாயன வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 50 பாரதிய மக்கள் மருந்தக மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
0 Comments