நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்தனர்.
ஆந்திராவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பெங்களூரு - கடப்பா - விஜயவாடா விரைவுச் சாலையின் 14 தொகுப்புகள்; கர்நாடகாவில் ரூ. 8,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை 748A இன் பெல்காம் – ஹங்குந்த் – ராய்ச்சூர் பிரிவின் ஆறு தொகுப்புகள்; ஹரியானாவில் ரூ .4,900 கோடி மதிப்புள்ள ஷாம்லி - அம்பாலா நெடுஞ்சாலையின் மூன்று தொகுப்புகள்; பஞ்சாபில் ரூ.3,800 கோடி மதிப்பில் அமிர்தசரஸ் - பதிண்டா வழித்தடத்தின் இரண்டு தொகுப்புகள்; மேலும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.32,700 கோடி மதிப்பிலான 39 இதர திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
0 Comments