வடகிழக்கு பகுதிகள் மேம்பாட்டுக்கான பிரதமரின் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் அஸ்ஸாமில் பல்வேறு வளர்ச்சித் திடங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, அஸ்ஸாமில் ரூ. 1,300 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் அவர் இன்று (மார்ச் 9) தொடக்கி வைத்தார்.
முகலாயர்களை எதிர்த்து போரில் வெற்றிகண்ட அஹோம் ரஜ்ஜியத்தின் படைத் தளபதியான லச்சித் போர்பூகனின் நினைவாக ஜோர்ஹாட்டில் நிறுவப்பட்டுள்ள அவரது 125 அடி உயர சிலையையும் பிரதமர் மோடி இன்று (மார்ச் 9) திறந்து வைத்தார்.
அஸ்ஸாமின் மேம்பாட்டுக்காக இரட்டை இன்ஜின் அரசு அதிவேகத்தில் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அஸ்ஸாமில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 5.5 லட்சம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
0 Comments