அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்தது. டெல்லி கேப்பிடல்ஸ் 18.3 ஓவரில் 113 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஆர்சிபி பந்துவீச்சில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4, சோபி மோலினியூக்ஸ் 3, ஆஷா சோபனா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு முதல் பரிசாக ரூ.6 கோடி, டெல்லி அணிக்கு 2வது பரிசாக ரூ.3 கோடி வழங்கப்பட்டது. டெல்லியுடன் 5 முறை மோதியதில், ஆர்சிபி முதல் முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments