2047-ஆம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளா்ச்சி அடைய முடியும் என்று சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இந்திய நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு நுகா்வின் பங்கு சுமாா் 58 சதவீதமாகும். எனவே உள்நாட்டு பொருளாதாரம் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
போதிய அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிந்தால், அது அதிக நுகா்வுக்கு வழிவகுக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்தித் துறையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
இதேபோல நிலம், தொழிலாளா், மூலதனம், வங்கி உள்ளிட்ட துறைகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
0 Comments