பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் 14.2 கிலோ அளவிலான ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு (மற்றும் 5 கிலோ சிலிண்டருக்கு விகிதாசார விகிதத்தில்) ரூ.300 மானியத்தை தொடர்ந்து அளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமான பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டப் பயனாளிகள் உள்ளனர்.
இதன் மூலம் 2024-25-ம் நிதியாண்டில் மொத்த செலவு ரூ.12,000 கோடியாக இருக்கும். இந்த மானியம் தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக
வரவு வைக்கப்படும்.
வரவு வைக்கப்படும்.
0 Comments