மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாட்டிலேயே முதன் முறையாக நீருக்குள்ளே இயங்கும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியிலான மெட்ரோ ரயில் பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு ரூ.4,965 கோடி ரூபாய் மதிப்பில், 4.8 கிலோ மீட்டர் நீளத்தில், இந்த மெட்ரோ ரயில் வழித்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் ஹூக்ளி ஆற்றின் அடியில் 45 வினாடிகளில் பாதையை கடந்து செல்லும். இந்த நிலையில், இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
0 Comments