பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே, துறைமுகங்கள், எண்ணெய் குழாய்கள், சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளுடன் தொடர்புடையவையாகும்.
சுமார் ரூ. 2,790 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தியன் ஆயிலின் 518 கி.மீ ஹால்டியா-பரவுனி கச்சா எண்ணெய்க் குழாயை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தக் குழாய் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் வழியாக செல்கிறது.
இந்தக் குழாய் இணைப்பு பரவுனி சுத்திகரிப்பு ஆலை, போங்கைகான் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குவஹாத்தி சுத்திகரிப்பு ஆலைக்கு பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கச்சா எண்ணெயை வழங்கும்.
0 Comments