தமிழ்நாடு மாநிலத் தோதல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.பழனிகுமாா், 2021-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் பணிக்காலத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் அதே பதவியில் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டாா்.
அவரது, நீட்டிக்கப்பட்ட பணிக் காலம் வரும் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) நிறைவடைகிறது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பணி நாளான வெள்ளிக்கிழமையுடன் பணி நிறைவு பெற்றார்.
இதையடுத்து, புதிய தோதல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments