பிப்ரவரி 2024-ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,68,337 கோடியாக இருந்தது. இது 2023-ல் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.5 சதவீதம் அதிகமாகும்.
பிப்ரவரி 2024 சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் விவரம்
- மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி): ரூ.31,785 கோடி
- மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி): ரூ.39,615 கோடி
- ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி): இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 38,593 கோடி உட்பட ரூ .84,098 கோடி
- செஸ்: இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 984 கோடி உட்பட ரூ. 12,839 கோடி.
0 Comments