ஐ.நா. பொதுச் சபையில் ‘முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிரான நடவடிக்கைகள்’ என்ற பெயரில், பாகிஸ்தான் சாா்பில் வெள்ளிக்கிழமை வரைவு தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு, விரோதம், வெறுப்புணா்வு மற்றும் வன்முறையை தூண்டுதல், அவா்களுக்கு எதிரான மதச் சகிப்புத்தன்மையற்ற பிற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அந்தத் தீா்மானம் கண்டனம் தெரிவித்தது.
முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வை எதிா்த்துப் போரிட சிறப்புத் தூதரை நியமிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸிடம் அந்தத் தீா்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து தீா்மானத்துக்கு ஆதரவாக 115 நாடுகள் வாக்களித்தன. எந்தவொரு நாடும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. இந்தியா, பிரிட்டன், பிரேசில், ஜொ்மனி, இத்தாலி, உக்ரைன் உள்பட 44 நாடுகள் தீா்மானம் மீது வாக்களிக்காமல் புறக்கணித்தன.
0 Comments