Recent Post

6/recent/ticker-posts

குறுங்கோளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜெயந்த் மூர்த்தி பெயர் / Indian space scientist Jayant Murthy named the dwarf planet

குறுங்கோளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜெயந்த் மூர்த்தி பெயர் / Indian space scientist Jayant Murthy named the dwarf planet

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் விஞ்ஞானியாக 2011-ம்ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜெயந்த் மூர்த்தி. 

இவரது ஆராய்ச்சிகள் புளூட்டோ உள்ளிட்ட குறுங்கோள்களை மையப்படுத்தி இருந்தது. குறிப்பாக, பிரபஞ்சபுறஊதா கதிர்களின் பின்னணியை அளவிடுவதில் கவனம் செலுத்தினார்.

சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் நிகழக்கூடிய வானியற்பியல் மாற்றங்களை உற்று நோக்குவதாக இவரது ஆய்வுகள் அமைந்தது. நாசாவிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தற்போது கவுரவ பேராசிரியராக வானியற்பியல் பாடம் கற்பித்து வருகிறார்.

விண்வெளியில் செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் உள்ள சுற்று வட்டப் பாதையில் சுழன்றுகொண்டிருக்கிறது ஒரு குறுங்கோள். சூரியனை சுற்றி வர 3 ஆண்டுகள் 3 மாதங்கள் கால அவகாசம் எடுக்கும் இந்த குறுங்கோள் '2005 ஈஎக்ஸ்296' (2005 EX296) என்றே இதுவரை அழைக்கப்பட்டது. 

தற்போது இதற்கு, '(215884) ஜெயந்த்மூர்த்தி' என்று சர்வதேச வானியல் சங்கத்தினர் பெயர்சூட்டி இந்திய வானியற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தியை கவுரப்படுத்தி இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel