புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் நேற்று (21 மார்ச் 2024) சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான சர்வதேச காடுகள் தினத்தின் கருப்பொருள் “காடுகளும் புதுமையும்: சிறந்த உலகத்துக்கான புதிய தீர்வுகள்” (Forests and innovation: new solutions for a better world) என்பதாகும். காடுகள், மரங்கள் மற்றும் நம் வாழ்வில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இதனையொட்டி புதுதில்லி தேசிய விலங்கியல் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் தொடர்பான ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிலையான வன மேலாண்மை மற்றும் வளங்களின் பயன்பாடு ஆகியவை பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமாகும். அது தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவே சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
0 Comments