கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆர்எல்வி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.
இதன் பலனாக 2016-ம் ஆண்டில் ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் முதல் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஹெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது.
இதன்பிறகு கடந்த 2023-ம் ஆண்டில் இஸ்ரோ தயாரித்த புதிய விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்க விடப்பட்டது. இந்த விண்கலம் பத்திரமாக ஓடுபாதையில் தரையிறங்கியது.
இதைத் தொடர்ந்து இஸ்ரோ தயாரித்த 'புஷ்பக்' என்ற புதிய விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது. இந்த விண்கலம் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது.
0 Comments