அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடப்பு மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் குரோஷியாவின் இவான் டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜி செக் ஜோடியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டனர்.
இதில் 6-7(3), 6-3, 10-6 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்றது. நடப்பு ஆண்டில் அவர்கள் இருவரும் இணைந்து வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.
0 Comments