பிஇஎம்எல் நிறுவனம், பெல் மற்றும் மிதானி நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Ministry of Defense MoU with BEML, Bell and Midhani
TAMIL
பிஇஎம்எல் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பிஇஎல்) மற்றும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனம் (மிதானி) ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் கனரக பயன்பாட்டு என்ஜின்களுக்கான மேம்பட்ட எரிபொருள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்காக முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பி.இ.எம்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சாந்தனு ராய்; மிதானி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.கே.ஜா; பெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பானு பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் 2024 மார்ச் 04, அன்று புதுதில்லியில் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இந்தக் கூட்டு முயற்சி மேம்பட்ட செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும். மேம்பட்ட எரிபொருள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை வடிவமைத்தல், சோதனை செய்தல், உற்பத்தி செய்ய உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தும்.
என்ஜின் தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் போர் வாகனங்கள் துறையில் தன்னம்பிக்கையை உறுதி செய்யும்.
'தற்சார்பு இந்தியா' முன்முயற்சியின் கீழ் நாட்டிற்குள் முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான அரசின் தீர்மானத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.
ENGLISH
The Ministry of Defense has signed a tripartite MoU with BEML, Bharat Electronics Company (BEL) and Mishra Dadu Nigam Corporation (MIDANI) to indigenously develop an advanced fuel and control system for heavy duty engines.
The MoU was signed by Mr. Shantanu Roy, Chairman and Managing Director of BEML; Dr SK Jha, Chairman and Managing Director of Midani; Mr. Banu Prakash Srivastava, Chairman and Managing Director, Bell, signed the MoU in New Delhi on 04 March 2024 in the presence of Secretary, Defense, Mr. Krithar Aramane.
This joint venture will deliver improved performance and reliability. It will focus on developing indigenous capabilities to design, test and manufacture advanced fuel and control systems. By utilizing the latest advancements in engine technology and control systems, companies will ensure self-reliance in the field of combat vehicles.
The MoU reaffirms the government's resolve to develop critical technologies domestically under the 'Self-reliant India' initiative.
0 Comments