பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மனோகர்லால் கட்டார் இன்று காலை தனது பதவியை நாஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நயாப்சிங் சைனி பாஜக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யபட்டுள்ளார்.
நயாப்சிங் சைனி அரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவரகா உள்ளார். மேலும் குருஷேத்ரா தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் நயாப்சிங் சைனி பதவி வகித்துவருகிறார்.
அரியானா மாநிலத்தை பொருத்தவரையில் மொத்தம் 90 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் பாஜகவுக்கு 41 எம்.எல்.ஏ.க்களும், ஜே.ஜே.பி கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பாஜக ஆட்சி நடத்திவந்தது.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு காரணமாக ஜே.ஜே.பி கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. பெருமான்மைக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், சுயட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
0 Comments