Recent Post

6/recent/ticker-posts

வெங்காய ஏற்றுமதிக்கான தடை காலவரையறையின்றி நீட்டிப்பு / Onion export ban extended indefinitely

வெங்காய ஏற்றுமதிக்கான தடை காலவரையறையின்றி நீட்டிப்பு / Onion export ban extended indefinitely

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் இருப்பதற்காக இம்மாத இறுதி வரை வெங்காயத்துக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் வெங்காய ஏற்றுமதியில் 50 சதவீதம் அதிகமாக, இந்தியாவிலிருந்து தான் வெங்காய ஏற்றுமதியாகிறது. கடந்த மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், வரலாற்றில் இதுவரை இந்தியாவிலிருந்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் தொடங்கி இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியை அதிகமாகச் சார்ந்திருக்கும் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேற்கண்ட நாடுகளில் வெங்காய விலை ஏற்றத்தைக் கண்டுள்ளதால், சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel