அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அருணாச்சல் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையிலான சுரங்கப்பாதையை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.
செலா சுரங்கப்பாதையானது, ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. மழை, குளிர், வெயில் உள்ளிட்ட வானிலைகளை தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மிக உயர்தர பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. செலா சுரங்கப்பாதையானது, 13 ஆயிரம் அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்ல இராணுவத்தினருக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை திட்டமானது, வேகமான போக்குவரத்துக்கு உதவுவது மட்டுமன்றி, சீனாவுக்கு அருகில் உள்ளதால், இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என கூறப்படுகிறது.
சுமார் 13, 000 அடி உயரத்தில் உள்ள சுரங்கப்பாதையானது, உலகத்தில் உள்ள நீளமான இரட்டைப் பாதையுடைய சுரங்கப்பாதை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments