ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் உள்ள சிந்த்ரியில் உள்ள இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உரத் தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2018-ம் ஆண்டு இந்த உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆலை இப்பகுதியில் 450 நேரடி மற்றும் 1௦௦௦ மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்கும். இது தவிர, தொழிற்சாலைக்கு பல்வேறு பொருட்களை வழங்குவதற்காக எம்.எஸ்.எம்.இ விற்பனையாளர்களை மேம்படுத்துவதன் மூலம் இப்பகுதி பயனடையும்.
0 Comments