ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் வெளியிட்ட உத்தரவில், 'ஒன்றிய அரசின் நியமனக் குழு பரிந்துரையின் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக, மகாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையின் (ஏடிஎஸ்) தலைவர் சதானந்த் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியக டிஜி-யாக ராஜீவ் குமார் சர்மா என்பவரும், தேசிய பேரிடர் மேலாண்மை படையின் டிஜி-யாக பியூஷ் ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக பணியாற்றி வரும் தின்கர் குப்தா வரும் 31ம் தேதி ஓய்வு பெறுவதால், அந்தப் பதவிக்கு சதானந்த் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments