பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 336 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபை என அழைக்கப்படும் தேசிய சட்டமன்றம் இன்று கூடியது.
அதில், பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் (72) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 336 உறுப்பினர்கள் கொண்ட அவையில், பெரும்பான்மைக்கு 169 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 201 வாக்குகளை பெற்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகியவற்றின் ஒருமித்த வேட்பாளரான ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்றுள்ளார்.
0 Comments