மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது குடியரசு தலைவரால் நேரடியாக மாநிலங்களவைக்கு நியமிக்கப்படலாம். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களுக்கு நியமன எம்பி பதவி வழங்கப்படுவது வழக்கம்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி, ஒரு கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் என பன்முகங்களை கொண்டவர்.
2006 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் அவருக்கு வழங்கப்பட்டது. குழந்தை வளர்ப்பு, நிதி திட்டமிடல் மற்றும் சேமிப்பு தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளது.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவராக இருந்த அவர், பில் கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதார முயற்சிகளிலும் உறுப்பினராக உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கிளாசிக்கல் லைப்ரரியை சுதா மூர்த்தி நிறுவியுள்ளார்.
0 Comments