தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகிய பொறுப்புகளை வகித்த தமிழிசை செளந்தரராஜன், தாம் வகித்த ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, இதுகுறித்து அவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ததை அடுத்து தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஆளுநர் பதவிகள் காலியாகின.
இந்நிலையில் அம்மாநிலங்களின் ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கான மாநில ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
0 Comments