இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று 'மெஷின்-டு-மெஷின் (எம் 2 எம்) தகவல்தொடர்புகளுக்கான உட்பொதிக்கப்பட்ட சிம் பயன்பாடு' குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறை, 09.11.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம், (எம்2எம்) தகவல்தொடர்புகளுக்கு உட்பொதிக்கப்பட்ட சிம் பயன்பாடு குறித்து டிராய் சட்டம், 1997 இன் கீழ் பரிந்துரைகளைக் கோரியது.
இது தொடர்பாக, பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் / எதிர் கருத்துகளைக் கோருவதற்காக 25.07.2022 அன்று 'எம்2எம் கம்யூனிகேஷன்களுக்கான உட்பொதிக்கப்பட்ட சிம்' குறித்த ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டது.
இதற்கு பதிலளித்த 15 பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்தனர். ஆலோசனை அறிக்கை மீதான திறந்த விவாதம் 14.12.2022 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் / உள்ளீடுகள், இந்த விஷயத்தில் விரிவான விவாதங்கள் மற்றும் அதன் சொந்த பகுப்பாய்வின் அடிப்படையில், டிராய் தனது பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது.
0 Comments