மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக 2024, பீகாரின் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஓர் இடம் கூட கொடுக்கவில்லை.
அதனால் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரும், ஒன்றிய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
அதனால் தற்போது கேபினட் அமைச்சராக இருக்கும் கிரண் ரிஜிஜுவுக்கு, கூடுதலாக பொறுப்பாக உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பொறுப்பையும் ஒதுக்கி உத்தரவிட்டார்.
0 Comments