Recent Post

6/recent/ticker-posts

பிப்ரவரியில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 119.7 கோடியாக உயர்வு - டிராய் / Number of telecom subscribers rises to 119.7 crore in February - TRAI

பிப்ரவரியில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 119.7 கோடியாக உயர்வு - டிராய் / Number of telecom subscribers rises to 119.7 crore in February - TRAI

பிப்ரவரியில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 119.7 கோடியாக உயர்வு - டிராய் / Number of telecom subscribers rises to 119.7 crore in February - TRAI

TAMIL

நகர்ப்புற தொலைபேசி சந்தா 66.37 கோடியாகவும், கிராமப்புற சந்தா 53.13 கோடியாகவும் அதிகரித்துள்ளது. மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் ஜனவரி மாதம் இறுதியில் 91.10 கோடியிலிருந்து பிப்ரவரி மாதம் இறுதியில் 91.67 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள மாதாந்திர சந்தாதாரர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஐந்து சேவை வழங்குநர்கள், மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் 98.35 சதவிகிதத்தினராக உள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் (52.2 சதவிகிதம்), பார்தி ஏர்டெல் (29.41 சதவிகிதம்), வோடபோன் ஐடியா (13.80 சதவிகிதம்), பிஎஸ்என்எல் (2.69 சதவிகிதம்) மற்றும் அட்ரியா கன்வர்ஜென்ஸ் (0.24 சதவிகிதம்) ஆக உள்ளனர்.

அதே வேளையில், வயர் மற்றும் வயர்லெஸ் பிரிவுகளில் உள்ள அனைத்து வட்டங்களும் பிப்ரவரி மாதத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பிப்ரவரி மாத இறுதியில் வயர்லைன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.73 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்துடன் 3.31 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த வயர்லைன் டெலி-டென்சிட்டி ஜனவரி 2024 இறுதியில் 2.33 சதவிகிதத்திலிருந்து பிப்ரவரி 2024 இறுதியில் 2.37 சதவிகிதமாக அதிகரிப்பு.

அதே காலகட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வயர்லைன் டெலி-டென்சிட்டி முறையே 6.10 சதவிகிதம் மற்றும் 0.31 சதவீதமாக உள்ளது.

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் ஏபிஎஸ்எஃப்எல் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பிப்ரவரி 2024 நிலவரப்படி வயர்லைன் சந்தைப் பிரிவில் 28.18 சதவிகிதத்தை தங்கம் வசம் வைத்துள்ளனர் என்று டிராய் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 116.46 கோடியாக அதிகரித்து, மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.34 ஆக பதிவு செய்துள்ளது.

கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தா 52.67 கோடியிலிருந்து 52.85 கோடியாக அதிகரித்தது. இது நகர்ப்புறங்களைப் போல் 0.34 சதவிகித மாதாந்திர வளர்ச்சியாக பதிவு.

பிப்ரவரி 2024 நிலவரப்படி, தனியார் சேவையில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 92.05 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டிருந்தனர். அதேசமயம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் 7.95 சதவிகித சந்தைப் பங்கை மட்டுமே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

Urban telephone subscription increased to 66.37 crore and rural subscription to 53.13 crore. The total number of broadband subscribers increased from 91.10 crore at the end of January to 91.67 crore at the end of February, according to the Telecom Regulatory Authority of India's monthly subscriber report.

The top five service providers, accounting for 98.35 percent of total broadband subscribers, are Reliance Jio Infocomm (52.2 percent), Bharti Airtel (29.41 percent), Vodafone Idea (13.80 percent), BSNL (2.69 percent) and Adria Convergence (0.24 percent).

Meanwhile, all circles in the wireline and wireless segments have registered growth in subscriber numbers during the month of February. The number of wireline subscribers increased to 3.31 crore at the end of February with a growth rate of 1.73 percent.

Overall wireline tele-density in India to increase from 2.33 percent at the end of January 2024 to 2.37 percent at the end of February 2024.  Urban and rural wireline tele-density is 6.10 percent and 0.31 percent respectively during the same period.

Three PSUs BSNL, MTNL and ABSFL hold 28.18 percent of the wireline market segment as of February 2024, according to TRAI. Meanwhile, the total number of wireless subscribers increased to 116.46 crore, registering a monthly growth rate of 0.34.

Wireless subscription in rural areas increased from 52.67 crore to 52.85 crore. It registered a monthly growth of 0.34 percent, similar to urban areas. As of February 2024, private service wireless subscribers accounted for 92.05 percent of the market share. Whereas BSNL and MTNL had only 7.95 percent market share.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel