2024 மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023ல் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 11.5 சதவீதம் அதிகமாகும். இந்த வரிவசூல் இதுவரையிலான ஜிஎஸ்டி வசூலில் இரண்டாவது பெரிய தொகையாகும்.
- மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) - ரூ.34,532 கோடி
- மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) - ரூ.43,746 கோடி
- ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) - இறக்குமதி செய்யப்ட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 40,322 கோடி உட்பட ரூ.87,947 கோடி
- செஸ் - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 996 கோடி உட்பட ரூ. 12,259 கோடி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 11,017 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ. 9,245 கோடி வருவாய் கிடைத்தது.
புதுச்சேரியை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.221 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 9 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதுச்சேரியில் ரூ.204 கோடி வருவாய் கிடைத்தது.
0 Comments