சர்வதேச பதற்ற நிலையால் சில முக்கிய சந்தைகளில் மந்தநிலை நிலவிய சூழலிலும், கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
முந்தைய 2022-23 ஆம் நிதியாண்டில் இது 10,704 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 2.13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. காஸா மற்றும் உக்ரைன் போர் காரணமாக முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் கடந்த நிதியாண்டு மந்தநிலை நிலவியது.
0 Comments