பாராதீப் துறைமுக ஆணையம் 2023-24-ம் நிதியாண்டில் சாதனை அளவாக 145.38 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதன் மூலம் சமீபத்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தையும் விஞ்சி நாட்டின் மிக உயர்ந்த சரக்கு கையாளும் முக்கிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
56 ஆண்டுகால செயல்பாட்டு வரலாற்றில் முதல் முறையாக, தீன்தயாள் துறைமுகத்தின் முந்தைய சாதனைகளை பாராதீப் துறைமுகம் முறியடித்துள்ளது. பாராதீப் துறைமுகம் ஆண்டு அடிப்படையில் 10.02 மில்லியன் மெட்ரிக் டன் (7.4%) சரக்கு கையாளும் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
இந்த நிதியாண்டில், இத்துறைமுகம் முன்னெப்போதும் இல்லாத அளவாக 59.19 மில்லியன் மெட்ரிக் டன் கடலோர கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டுள்ளது.
இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.76 மில்லியன் மெட்ரிக் டன், அதாவது 1.30 சதவீதம் வளர்ச்சியாகும். அனல் நிலையங்களுக்கான நிலக்கரி கடலோர கப்பல் போக்குவரத்து 43.97 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது.
அதாவது முந்தைய ஆண்டின் சரக்கு கையாளுதலை விட 4.02% அதிகமாகும். இதனால், பாராதீப் துறைமுகம் நாட்டின் கடலோர கப்பல் போக்குவரத்து மையமாக உருவாகி வருகிறது.
0 Comments