எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு (ஐசிஐ) மார்ச் 2023 குறியீட்டுடன் ஒப்பிடும்போது 2024 மார்ச்சில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி மார்ச் 2024-ல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை ஐசிஐ அளவிடுகிறது.
எட்டு முக்கிய தொழில்கள் தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) சேர்க்கப்பட்ட பொருட்களின் எடையில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
2023 டிசம்பருக்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 5.0 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் ஐசிஐ-ன் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
சிமெண்ட் உற்பத்தி, இந்தக் காலக்கட்டத்தில் 10.6 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி 8.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.0 சதவீதமும், மின்சார உற்பத்தி 8.0 சதவீதமும் அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 1.3 சதவீதம் குறைந்துள்ளது.
இயற்கை எரிவாயு உற்பத்தி 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்துள்ளது. எஃகு உற்பத்தி 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான தரவுகள் தற்காலிகமானவை. ஆதார நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின்படி முக்கிய தொழிற்சாலைகளின் குறியீட்டு எண்கள் திருத்தியமைக்கப்படுகின்றன அல்லது இறுதி செய்யப்படுகின்றன.
2024, ஏப்ரல், மாதத்திற்கான குறியீடு 2024 மே மாதம் 31-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.
0 Comments