இந்தியாவின் பொருளாதாரம் குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ள உலக வங்கி, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி (GDP) புல்லட் வேகத்தில் இருக்கும் என்று கூறியுள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக, உலக வங்கி இந்த காலகட்டத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 1.2 சதவீதம் குறைவாக மதிப்பிட்ட நிலையில், இப்போது அது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மதிப்பீட்டை 7.5 சதவீதமாக மாற்றியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் 6.1 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் தெற்காசியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக இருக்கும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலக வங்கி செவ்வாயன்று தெற்காசிய பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், தெற்காசியாவின் வளர்ச்சி விகிதம் 2024 ஆம் ஆண்டில் 6.0 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்தியாவில் ஏற்பட உள்ள வலுவான வளர்ச்சி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நிலை உள்ளது தான் என தெரிவித்தது. எனினும், 2025ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் பொருளாதாரம் 5.7 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் 2.3 சதவிகிதம் என்ற அளவிலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவிகிதம் என்ற அளவிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments