மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 2550-வது பகவான் மகாவீரர் நிர்வாண மகோத்சவத்தை இன்று தொடங்கி வைத்தார்.
பகவான் மகாவீரரின் சிலைக்கு அரிசி மற்றும் மலர் இதழ்களால் அஞ்சலி செலுத்திய திரு மோடி, பகவான் மகாவீரர் சுவாமி குறித்து "வர்த்தமான் மே வர்தமான்" என்ற தலைப்பில் பள்ளிக் குழந்தைகள் நடத்திய நடன நாடக விளக்கக்காட்சியைக் கண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
0 Comments