வடகிழக்குப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிக்குழுவின் 4-வது கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நித்தி ஆயோக், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் தனியார் பங்குதாரர்களும் இதில் கலந்து கொண்டனர்.
தனியார் துறை உள்ளிட்ட பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலாவின் விரிவான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு செயல் திட்டத்துடன் உத்திகள் குறித்து பணிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
0 Comments