இந்திய விமானப் படைக்கு 97 தேஜாஸ் இலகுரக போர் விமானங்களை (எல்.சி.ஏ. எம்.கே.-1 ஏ) வாங்குவதற்காக, பொதுத்துறை ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கியுள்ளது.
அதற்கு பதிலளிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். திட்டம் இறுதி உறுதி செய்யப்பட்டால், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ராணுவ தளவாடங்களில் இந்திய ராணுவம் செய்யும் மிகப்பெரிய கொள்முதலாக இது இருக்கும். இந்த புதிய போர் விமானங்களின் கொள்முதலுக்கு சுமார் ரூ.67,000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின், 40 தேஜாஸ் மார்க் 1 போர் விமானங்களுக்கான (இரண்டு படைப்பிரிவுகள்) முந்தைய ஆர்டரை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் விரைவில் பூர்த்தி செய்ய உள்ளது.
அதைத் தொடர்ந்து, 45,700 கோடி மதிப்பிலான 83 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களுக்கு (நான்கு படைப்பிரிவுகள்) பிப்ரவரி 2021 இல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கியது.
அதன்படி, ஏற்கனவே ஆறு தேஜாஸ் ஸ்க்வாட்ரான்கள் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதியதாக ஐந்து ஸ்க்வாட்ரன்கள் (97 தேஜாஸ் மார்க் 1A) கூடுதலாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இது உள்நாட்டு தேஜாஸ் போர் விமானங்களின் எண்ணிக்கையை 11ஸ்குவாட்ரன்களாக உயர்த்துகிறது.
0 Comments