கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை 2024 ஏப்ரல் 30 முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள்ளது.
தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், ஏப்ரல் 30, 2024 அன்று சேவையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி, இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
1964-ம் ஆண்டு மே 15-ல் பிறந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி 1985 ஜூலை 01 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணரான இவர், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளார்.
0 Comments