Recent Post

6/recent/ticker-posts

சி-டாட் மற்றும் ஐஐடி ஜோத்பூர் இடையே ஒப்பந்தம் / Agreement between C-DOT and IIT Jodhpur

சி-டாட் மற்றும் ஐஐடி ஜோத்பூர் இடையே ஒப்பந்தம் / Agreement between C-DOT and IIT Jodhpur

மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சி-டாட் மற்றும் ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஆகியவை "5ஜி நெட்வொர்க் மற்றும் அதற்கு அப்பால் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் தானியங்கி சேவை நிர்வாகத்தி்ற்கான" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவைகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு, தொலைத்தொடர்பு தயாரிப்புகள், வணிகமயமாக்கல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் (டி.டி.டி.எஃப்) கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

5ஜி போன்ற நெட்வொர்க்கில் உருவாக்கப்பட்ட தொடர்ச்சியான தகவல்களைப் பயன்படுத்தி தானியங்கி நெட்வொர்க் மேலாண்மை, தவறு கண்டறிதல் மற்றும் குறைபாடுகள் கண்டறியும் தொழில் நுட்பங்களுக்கான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் சி-டாட் இயக்குநர் டாக்டர் பங்கஜ் குமார் தலேலா, ஜோத்பூர் ஐஐடியின் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சாய் கிரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel