சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் கடற்கொள்ளையர்களால் ஈரான் நாட்டு மீன்பிடி கப்பல் கடத்தப்பட்டது. இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படை ஐஎன்எஸ் சாரதா கப்பபை அனுப்பி வைத்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2ம் தேதி கடற்கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டு, மீன்பிடி கப்பலில் இருந்து 11 ஈரான் நாட்டு மாலுமிகள் மற்றும் 8 பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்திற்கு வந்த கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஐஎன்எஸ் சாரதாவுக்கு 'ஆன் தி ஸ்பாட் யூனிட் சிடேஷன்' விருது வழங்கி பாராட்டினார்.
0 Comments