Recent Post

6/recent/ticker-posts

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை - ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது ரஷியா / Ban on Nuclear Weapons in Outer Space - UN Russia canceled the resolution

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை - ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது ரஷியா / Ban on Nuclear Weapons in Outer Space - UN Russia canceled the resolution

உலக நாடுகள் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்தக் கூடாது என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்வதற்கான ஒப்பந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டாகக் கொண்டுவந்தன.

எனினும், கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ரத்துசெய்தது.

இது குறித்து ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் வாஸிலி நெபன்ஸியா கூறுகையில், 'விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிறுத்துவதைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1967-ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீா்மானம் அபத்தம் நிறைந்ததாக உள்ளது. அனைத்துவகை ஆயுதங்களையும் விண்வெளியில் நிறுத்துவதைத் தடை செய்வதற்கான அம்சம் அந்தத் தீா்மானத்தில் இடம்பெறவில்லை' என்றாா்.

எனினும், தீா்மானத்தை ரத்து செய்ததன் மூலம் ஆயுதப் பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு ரஷியா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel