இந்திய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பு வகித்த ஆர். ஹரி குமார் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், கடற்படை செயல்பாட்டு தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்த தினேஷ் குமார் திரிபாதி, கடற்படைத் தளபதியாக கடந்த 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் 26-வது கடற்படைத் தளபதியாக இன்று (ஏப்.30) பொறுப்பேற்றுக் கொண்டார் தினேஷ் குமார் திரிபாதி.
ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கவச் ஆகிய போர்க் கப்பல்களை தலைமையேற்று திறம்பட வழிநடத்தியவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி.
0 Comments