சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியானது ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் இந்திய அணி 5-1என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக்கோப்பை தொடரில் ரீகர்வ் பிரிவில் இந்திய ஆடவர் அணி 14 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணி 2010-ம்ஆண்டு நடைபெற்ற தொடரில் தங்கம் வென்றிருந்தது.
கலப்பு அணிகள் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், தீரஜ்பொம்மதேவாரா ஜோடி 6-0 என்றகணக்கில் மெக்சிகோவின் அல்ஜான்ட்ரா வலென்சியா, மத்தியாஸ்கிராண்டே ஜோடியை வீழ்த்திவெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
மகளிருக்கான தனிநபர் ரீகர்வ்பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் லிம் சிஹ்யோனிடம் 0-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளது.
0 Comments