ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நாளுக்குநாள் போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று இரவு ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது.
இந்த தாக்குதலின்போது அமெரிக்கா சில ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த ஜெனரல் அதிகாரி உட்பட ஏழு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் குற்றம் சாட்டியது.
0 Comments