Recent Post

6/recent/ticker-posts

நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between National Center for Good Governance and Ministry of Public Administration, Bangladesh

நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between National Center for Good Governance and Ministry of Public Administration, Bangladesh

நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2024-2029 காலகட்டம் வரை புதுப்பிப்பது தொடர்பான இருதரப்பு விவாதங்களுக்காக நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 4 பேர் கொண்ட குழு, அத்துறையின் செயலாளர் திரு வி. சீனிவாஸ் தலைமையில் வங்கதேசம் செல்கிறது. 

அந்நாட்டின் பொது நிர்வாக அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. பங்களாதேஷ் குடிமைப்பணி ஊழியர்களுக்கான கள நிர்வாகத்தில் திறன் வளர்ப்பு திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பது குறித்தும் இந்த தூதுக்குழு ஆலோசனை நடத்தும்.

இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் ஆகியவை 2014ம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்த ஒத்துழைத்து செயல்படுகின்றன. 

இருதரப்பு ஒத்துழைப்பின் கீழ், 71 திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், 2014- ம் ஆண்டு முதல் தற்போது வரை 2600 வங்கதேச குடிமைப்பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நல்லாட்சிக்கான தேசிய மையத்திற்கு வந்து பயிற்சி பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel