இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் மேம்பாட்டு அமைப்பான தேசியப் புனல் மின் கழகம், மிதக்கும் சூரிய மின்சக்தி தொழில்நுட்ப வழங்குநராக செயல்படும் நார்வே நிறுவனமான ஓஷன் சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சூரிய மின்தகடுகள் அடிப்படையில் ஓஷன் சன் நிறுவனத்தின் மிதக்கும் சூரிய சக்தி தொழில்நுட்பத்தை செயல்விளக்கம் செய்யும் ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகளை தேசியப் புனல் மின் கழகமும், ஓஷன் சன் நிறுவனமும் ஆராயும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசியப் புனல் மின் கழக நிர்வாக இயக்குநர் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன்), திரு வி.ஆர்.ஸ்ரீவஸ்தவா, ஓஷன் சன் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி திரு கிறிஸ்டியன் டோர்வோல்ட் ஆகியோர் 2024 ஏப்ரல் 29 அன்று மெய்நிகர் முறையில் கையெழுத்திட்டனர்.
0 Comments