இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் காந்திநகரில் உள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரில் ஓர் அலுவலகத்தைத் திறந்துள்ளது.
இது பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கான நிதிச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும்.
2024, ஏப்ரல் 17 அன்று அபுதாபியில் நடைபெற்ற உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு 2024-ல் நடைபெற்ற "நீண்ட கால எரிசக்தி சேமிப்புக்கான எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள்" என்ற குழு விவாதத்தின் போது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி ஆணைய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பிரதீப் குமார் தாஸ், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு பங்களிக்கும் முன்முயற்சியை எடுத்துரைத்தார்.
0 Comments