பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ்-க்கு எடுத்து செல்லும் பணியானது இந்திய விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு, தேவையான உதவிகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏா்போா்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்டவை செய்து வருகின்றன.
இங்கு மக்களவை தேர்தல் தொடங்கும் அதே நேரத்தில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிஸ் பிரம்மோஸ் ஏவுகணைகள் தரையிறங்க உள்ளன. இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
வெளிநாடு ஒன்றுடன் கையெழுத்தான மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் இதுவாகும். முதல் பிரம்மோஸ் ஏற்றுமதி ஏவுகணை நாக்பூரில் இருந்து IAF C-17 Globemaster போக்குவரத்து விமானத்தில் இன்று இரவு புறப்பட உள்ளது.
நாளை (ஏப்ரல் 19ம் தேதி) அதிகாலை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை சென்றடையும். பிரம்மோஸ் ஏவுகணையின் கூடுதல் பாகங்கள், மூன்று சரக்கு விமானங்களில் எடுத்து செல்லப்பட உள்ளன.
0 Comments