காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியின் மாணவர்களான திரு விக்ரம் மற்றும் திரு பிரியதர்ஷன் இவர்களால் உருவாக்கப்பட்ட “காரை காவலன்” என்ற புதிய செயலியின் அறிமுகவிழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கி ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இச்செயலியானது வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் குடிமக்கள் இச்செயலியின் வாயிலாக எந்தவொரு தவறான நடத்தையையும் புகைப்படத்துடன் உடனடியாக தங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு பெயர் தெரியாமல் தெரிவிக்கலாம். மேலும், புகாரளிப்பவர் புகாரளிக்கப்பட்ட வழக்கின் நிலையை நிகழ்நேரத்தில் செயலியில் பார்க்கலாம்.
0 Comments