Recent Post

6/recent/ticker-posts

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் / Silver medal for India's Deepika Kumari in archery

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் / Silver medal for India's Deepika Kumari in archery

சீனாவின் ஷாங்காயில் உலக வில்வித்தைப்போட்டி நடைபெற்று வருகிறது. உலக வில்வித்தை மகளிா் தனிநபா் பிரிவு அரையிறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தீபிகா குமாரி உள்பட, தென்கொரியாவின் நாம் சுஹ்யோன், கிம் சிஹ்யோன் மற்றும் சீனாவின் லீ ஜியாமன் ஆகொய நால்வர் தகுதிபெற்றனர்.

இந்த நிலையில், அரையிறுதியில் தென்கொரியாவின் நாம் சுஹ்யோனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் தீபிகா குமாரி, தென்கொரியாவின் கிம் சிஹ்யோனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இதையடுத்து, இரண்டாம் இடம் பிடித்த உலகின் முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

கடந்த டிசம்பரில் தீபிகா குமாரிக்கு(29) குழந்தை பிறந்த நிலையில், பேறுகால ஓய்வுக்குப் பின், மீண்டும் வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், பிப்ரவரியில் பாக்தாத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel